ப் ஒரு வாசகி.
என் பெயர், ஊர் வெளியிட வேண்டாம். என் ஜாதகத்தில் திருமண பாக்கியம் உள்ளதா? இருந்தால் எப்போது நடக்கும்? அசலாலி சொந்தமா? என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா? மனதுக்குப் பிடித்த வரன் அமையுமா? சம்பாதிக்கும் யோகமுள்ளதா?
2-5-1990-ல் பிறந்தவர். மகர லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். பெயர் வெளியிட வேண்டாம் என கூறிவிட்டு, கேள்வி மட்டும் நிறைய கேட்டுள்ளீர்கள். உங்களுடைய ஏழாமதிபதி சந்திரன் லக்ன சாரத்தில் உள்ளார். அதனால் கண்டிப்பாகக் கல்யாணம் நடக்கும். உங்கள் ஜாதக அமைப்புப்படி, விருப்பத் திருமணமாக அமையும். லக்னம், ராசி இரண்டுமே நாகதோஷம் கொண்டுள்ளது. கொஞ்சம் காதல்- கலப்பு மணமாக அமையும். நடப்பு சுக்கிர தசை. இதில் சந்திர புக்தி 2024 ஜூன் வரை. இதற்குள் திருமணம் முடிந்துவிடும். இவ்விதம் சனி, சந்திரன் சம்பந்தமுள்ள பெண்கள், குத்தாலம் அருகே திருவேள்விக் குடி ஆலயம் சென்று வழிபடவேண்டும். மேலும் அருகிலுள்ள ஆலயத்தில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யவேண்டும். அன்னதானமும் நல்லது.
ப் டி. கனகராஜ், மைசூரு.
எனக்குத் தற்போது ஏழரைச்சனி உள்ளது. இது எப்படியிருக்கும்? சனி தசை வேறு நடக்கிறது.
நீங்கள் 19-11-1955-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். உங்களின் 8-ஆமதிபதி சனி உச்சம். எனவே தீர்க்காயுள். நடப்பு சனி தசை. மேலும் மகர ராசிக்கு ஏழரைச்சனி வேறு. அதில் 2023, ஜூன்வரை சந்திர புக்தி. எப்போதும் சனி தசை, சந்திர புக்தி எதிர்பாராத இழப்புகளைத் தரும். இந்த சந்திர புக்தி உங்கள் வீட்டில் பொன் நகைகள் திருட்டு போகும் நிலையை உண்டாக்கும். மேலும் கண் அல்லது வயிற்றுப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் மருத்துவச் செலவுண்டு. இவ்விதம் ஏழரைச்சனி மற்றும் சனி தசையும் நடந்து, அதில் சந்திர புக்தியும் சந்திக்கும்போது, சனிக்கிழமை காலபைரவருக்கு 19 மிளகைத் துணியில் கட்டி, நல்லெண்ணெயில் திரிபோட்டு தீபமேற்றவும். இந்த ஜாதகர் முடிந்தால் சனிக்கிழமை ஒருபொழுது விரதமிருந்து, சிவனை வழிபட்டு, அபிஷேகத்திற்கு முடிந்ததை வாங்கிக் கொடுக்கவும். வயதின் காரணமாக விரதமிருக்க முடியாவிட்டால், கீழ்நிலை பணிபுரியும் வயதான பெண்ணுக்கு அன்னதானம் செய்யவும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_46.jpg)
ப் கோமதி, திருச்சி.
என் மகன் வாகீசன் ஜாதகம் அனுப்பி யுள்ளேன். அவரது தொழில் பற்றிக் கூறவும்.
மகன் 16-9-1976-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். இவரின் வேலைக்குரிய 6-ஆமதிபதி சனி 12-ல். இவர் மாதத்துக்கு ஒருமுறை வேலையை மாற்றுவார். நடப்பு சனி தசையில் புதன் புக்தி 2023, டிசம்பர் வரை. அதற்குள் முதல்போட்டு சொந்தத்தொழில் தொடங்குவார். தொழில் தொடங்க தாய்மாமன் ஆதரவுண்டு. எதிர்காலத்தில், வீடு கட்டமுடியும். உடனே கட்டுவதற்கு வாய்ப்பில்லை. இவ்விதம் புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், தொழில் தொடங்கும் முன் அறந்தாங்கி- மீமிசல் சாலை, மணமேற்குடி ஜெகதீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடவேண்டும். மேலும் வீட்டுக்கு அருகிலுள்ள விநாயகரை நன்கு வேண்டிக்கொள்ளவும்.
ப் எம். திருவேங்கடம், பெரம்பூர், சென்னை.
எனது மகன் டி. கணேசன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுக்கு எப்போது வேலை கிடைக்கும்?
உங்கள் மகன் 18-3-1985-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். இவரது ராசிக்கு நடப்பு ஏழரைச்சனி. 2023-ல் ஜென்மச்சனியாக வரும். இவரது ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி நீசபங்கம். எனவே வேலை கிடைத்தால் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். நடப்பு சனி தசை. துலா லக்னத்துக்கு சனி யோகாதிபதி ஆவார். எனினும் எந்த தசையும் சுய புக்தியில் நிறைய நன்மை தராது. 2023-ல் கோட்சார சனி ராசியில் பிரவேசித்தவுடன் வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. 2024, பிப்ரவரியில் சனி தசை, புதன் புக்தியில் வேலை சார்ந்து வெளிநாடு செல்வார். குரு, மேஷ ராசிக்கு மாறுவதற்குள் கடின முயற்சிக்குப்பின் வங்கிக்கடன் கிடைக்கும். இவ்வாறு, நிரந்தர வேலை வேண்டுவோர் திருச்சி- முசிறி அருகேயுள்ள திருத்தலையூர் தலம் சென்று வணங்கவும்.
ப் ஆர். கார்த்திக், கரூர்.
எனது திருமணம் எப்போது நடக்கும்?
11-7-1991-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். ராசி, லக்னத்தில் கேது, ராகு. எனவே நாகதோஷ ஜாதகம். மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி நடப்பு. தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. அடுத்து 2023, பிப்ரவரியில் சூரிய புக்தி தொடங்கும். அப்போது திருமணம் நடக்கும். இவ்விதம் புதன் தசை நடப்பவர்கள். காஞ்சிபுரத்திலுள்ள பச்சை வண்ணராகக் காட்சிதரும் பவள வண்ணப் பெருமாள் கோவில்சென்று வணங்கலாம். அருகிலுள்ள பெருமாளுக்கு பச்சை வஸ்திரம் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளலாம். புதன்கிழமைதோறும் துளசி மாலைகொண்டு பெருமாளை சேவிக்கவேண்டும். புதன் தசை மேன்மை தரும்.
ப் லதா, ஒட்டன்சத்திரம்.
என் மகன் டி. செல்வகுமார் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவர் தற்போது அரசு வேலைக்குத் தேர்வெழுதியுள்ளார். அரசு வேலை கிடைக்குமா? மேலும் குத்தகை இடம் உள்ளது. சொந்த இடம் அமையுமா?
மகன் செல்வகுமார் 12-7-1999-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு குரு தசையில் ராகு புக்தி 2025, பிப்ரவரி வரை. இதற்குள் நிறைய பணம் செலவுசெய்தால் அரசு வேலை கிடைக்கும். குரு மேஷ ராசியில் இருக்கும்போது சொந்த இடம் வாங்க இயலும். இவ்விதம் அரசுப் பணிக்காகக் காத்திருப்பவர்கள் விழுப்புரம்- சென்னை சாலையில், திருப்புறவார் பனங்காட்டூர், பனங்காட்டீஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை வணங்கவேண்டும். மேலும் அருகிலுள்ள கோவிலில் நவகிரக சூரியனுக்கு ஞாயிறுதோறும், கொஞ்சம் கோதுமையை அவர் பாதத்தில் வைத்து, நெய் விளக்கேற்றி வணங்கவும்.
ப் கே. முத்துலட்சுமி.
எனக்கு சொந்த வீடு உள்ளது. ஆனால் என்னால் அங்கு குடியிருக்க முடியவில்லை. காரணம் என்ன? பரிகாரம் கூறவும்?
12-2-1989-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். உங்களின் 4-ஆம் அதிபதி செவ்வாயும், விரய அதிபதி சந்திரனும் ஒரே நட்சத்திரக் காலில் உள்ளனர். அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்காதவரை அந்த வீடு உங்கள் பெயரில் இருக்கும். ஒருவேளை அந்த வீட்டுக்கு குடிபுகுந்தால் உடனே, அதனை விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்; கவனம்தேவை. இவ்விதம் வீடு சம்பந்த கோளாறுகள் சரி செய்யப்பட, புதுக்கோட்டை; செவலூர் சென்று, பூமிநாத சுவாமியை வணங்குவது நல்லது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/Q&A-t_0.jpg)